திரும்பிப்பார்!
காட்சி 4 · 4 / 93
குணரத்தனம்: இப்படி எல்லோருக்கும் அம்மா துணையா இருக்கிற தாலதான் அவங்க வாழ்க்கைத் துணைவரை வீட்டோட இருக்கிறவரா பாக்கிறாங்க!...... ...
தங்கம்: ஏம்பா....அது மாதிரி புருஷன் கிடைக்காது ... லக்ஷிமி மாதிரி இருக்குது பொண்ணு!
(பரந்தாமன் வருகிறான் குளித்து டிரஸ்.செய்துகொண்டு)
பூமாலை: வா தம்பி! இவங்கள்ளாம் தெரியுமா? (பரந்தாமன் முழித்தல்) ஓ! இவுங்க பெண்ணைமாத்திரந்தான் தெரியும் போலிருக்கு ... ... பாமாவோட பெற்றோர்!.
பரந்தாமன்: ஒகோ! நமஸ்காரம்!
பூமாலை: கல்யாணம் நிச்சயம் பண்ண வந்திருக்காங்க! என்ன ... ... சம்மதந்தானே உனக்கு ... ... ...
(பரந்தாமன் மௌனம், நாணம்)
குணரத்தனம்: என்ன கேக்கிறீங்க இதைப்போயி! வாழைப்பழம் வேண்டாங்கிற குழந்தை உண்டாங்கிறேன்.
பூமாலை: என்ன பரந்தாமா!
பரந்தாமன்: சரிக்கா!
குணரத்தனம்: அப்பசரி. நாங்க வரோம். சந்தோஷம். ஆக வேண்டியதைக் கவனிப்போம்.
★
கருடன் : ஸ்...சும்மா யிரு ! அப்புறம் கம்பி எண்ணனும்... நல்ல வேலை செஞ்ச ... (என்று ரிவால்வரை வாங்கி டிராயரில் வைத்து மூடிவிட்டு பையனிடம்) ஏ பையா ! சூடா ஒரு கப் காபி கொண்டாந்து கொடு. பரந்தாமன் : விடக்கூடாது .. (பையன் போதல்) கருடன்: (கம்பீரமாய்) ஆமாம் விடக்கூடாது ! பரந்தாமன் : ஏய் நான் அடிபட்டதை வெளியில் விடக்கூடாது! கருடன் : அது சரி... நான் அப்பவே சொன்னேன். பிறத்தியான் எழுதினதை உன் பேரால் போடவேண்டாமென்று - இப்ப பஞ்சணை புத்தகம் எழுதியிருக்கே !
அதுக்கு இருக்கிற மதிப்பு...இல்லற ஜோதிக்கு இருக்குதா ? ஏன் வீண் வம்பு அநாவசியமா. அடாடா ... பஞ்சணையைப்பத்தி லெட்டர்கள் வந்திருக்கு ... யார் அந்தத் துறவி என்பவர். அவரைப் பார்க்க முடியுமா ? போட்டோ இருக்கா? அவர் வரகவியா, சுய கவியா ? அவர் கையிலே பேனா இருக்கிறதா, மன்மதனின் வில்லே இருக்கிறதா ? பேனாவிலே மை இருக்கிறதா, அல்லது கருப்பஞ் சாறே இருக்கிறதா? இப்படியெல்லாம் உன்னை வர்ணிக்கிறார்கள். இல்லற ஜோதியை அப்படி வர்ணிக்கவும் இல்லை.
அது நிறைய விக்கவும் இல்லை. பரந்தாமன் : வியாபாரமாகாவிட்டாலும், இல்லற ஜோதி எனக்கு ஒரு இன்பமான ஜோடியை அளித்திருக்கிறது.
★
