உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பராசக்தி/காட்சி 38
திரைக்கதை & வசனம்

பராசக்தி

காட்சி 38 · 38 / 46

பஞ்சமோ பஞ்சமென்றே—நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின்றாரே—இவர் துயர்களைத் தீர்க்க ஓர் வழியுமில்லையே (நெஞ்சு

குப் : அண்ணே நீ பாடினதெல்லாம் சரிதான்.

குண : இந்தப் பாட்டை நான் பாடலே குப்பா இந்தப் பாட்டை நான் பாடியிருந்தால் எல்லோரும் அடிக்க வருவாங்க இது வேறே ஒருத்தர் பாடியது.

பூசாரி : டேய் குப்பா தீவெட்டி பூஜைக்கு நேரமாச்சு மணி அடிக்கவாடா. (குணசேகரன் போய்விடுகிறான்)

குப் : என்னண்ணே! போறே? நாளைக்கு வர்றியா?

(பூஜை முடிந்தவுடன் கல்யாணி வருகிறாள்)

கல் : (சிலையை நோக்கி) தாயே! பராசக்தி! எனக்கு நீ தான் கதி! லோகமாதா என்னைக் காப்பாற்று.

பூசாரி : யாரது?

கல் : கதியற்றவள் பெயர் கல்யாணி.

பூசாரி : கவலைப்படாதேம்மா உன் கஷ்டங்கள் எல்லாம் தீருவதற்குத்தான் அம்பாள் கோயிலுக்கு வந்திருக்கே நீ ஏன் இப்பண்ணுமாதிரி இருக்கே! உள்ளே சென்று என் தாயைத் தாராளமாக வணங்கம்மா! (கல்யாணி உள்ளே போகிறாள். சென்றவுடன் பூசாரி தனக்குள்) ஆஹா! என்ன அழகு, என்ன உடம்பு! என்ன வாசியம்! இன்று இவளை விட்டுக்கூடாது வழி பலாத்காரம் பலாத்காரமா? பராசக்தி கோவிலிலா? ஆம் வேறு எங்கே செய்வது பூசாரி சுட்டகல்லில் சோறு என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றினைப் கற்பழிப்பதா?

ஆம் இதைச் செய்வதில் என்ன? ஏன் அம்பாள் இருக்கிறாள் என்று பார்க்கிறாயா? அவள் இந்த இடத்திலேதான் இருப்பாள். நடமாட்டாள். ம்... தாமதிக்காதே (கல்யாணியின் கையைப் பிடித்து) கல்யாணி வேறு விதியாசமா நினைக்காதே. வியாதியுள்ள பெண்களைத் தொடுவதற்கு எப்படி டாக்டருக்கு உரிமை இருக்கிறதோ... அதுபோல பக்தியுள்ள பெண்களைத் தொடுவதற்கு ஆண்டவனுடைய அடியார்களாகிய எங்களுக்கு உரிமை உண்டு.

கல் : சீ...காமப்பேயே—தாயே பராசக்தி!

(பூசாரி கல்யாணியின் கற்பைக் கசக்க முயல்கிறான். ஆனால் குப்பன் இக்காட்சியைக் கண்டு மணியை அடித்து விடுகிறான். புலி வாயின் பிடியிலிருந்து புள்ளி மான் தப்பி ஓடுகிறது)

(தொல்லைகளாலும் பசிக்கொடுமையாலும் கன்னியரின் கற்பைச் சூறையாடும் கயவர்களாலும் கல்யாணி துரத்தப்பட்டு அவள் வாழ்க்கையின் ஓரத்திற்கே சென்று விட்டாள்)

கல் : கண்ணே! அதோ நம் உலகிற்குப் பாதை அந்த உலகிற்குப் போய்விட்டால் பசியே கிடையாது! உலகத்தின் பெயரைச் சொல்லி என் உயிரை வாங்கப் பார்க்கிறாயே அம்மா என்று கொஞ்சுகிறாயா? முடியாது எந்த உயிர்க்காக இந்தப் பாழும் உயிரை சுமந்தேனோ அந்த உயிரை கொல்லத்தான் போகிறேன். இந்த வஞ்சக உலகத்தில் உன்னை தனியாக வாழவிட முடியாது என் மடியிலே தவழும் மாணிக்கம் உன்னை இந்த நதியிலே தவழ விட்டுப்போகிறேன். திசைகாட்டி? அதுவே என் சகம் காட்டி!

உன்னை இந்த ஆறுகாட்டும் வழியே அனுப்பப் போகிறேன். சோறுபோட சொரணையற்றவர்கள் விழுந்து சாவதற்கு இந்த ஆற்றையாவது வெட்டினார்களே! வா போவோம் வறுமை இல்லாத இடத்துக்கு உன் கடைசி முத்தத்தைக் கொடு! கொடுக்கமாட்டாயா? கன்னித்தமிழே கட்டி முத்தம் ஒன்று கொடு. உன் கடைசி முத்தத்தை இந்தக் காய்ந்த உதட்டிலே கொடு! கொடு.

(குழந்தையைத் தூக்கி ஆற்றிலே எறிகிறாள் கல்யாணி அப்போது போலீசார் வந்து கல்யாணியை விரட்ட அவளும் ஆற்றில் குதிக்க அவளைச் சிறைபிடிக்கின்றனர் போலீசார்)

குண : சாவது எவ்வளவோ மேல். இப்படி கஷ்டப்படுவதைவிட வைரக்கல்லிலே சம்மட்டி அடி விழுந்தாற் போல் எங்கள் குடும்பம் குழைந்து நொறுங்கிவிட்டதே. கல்யாணி எங்கு போனாளோ? சகோதரர்கள் என்னவானார்களோ ஞானசேகரன்! சந்திரசேகரன்!

(இடம் நீதிமன்றம். குற்றவாளிக் கூண்டிலே கல்யாணி)