மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 3 · 3 / 15
கழனியில் வேலை செய்வோரும்—அந்திப்போதிலே
சேர்ந்து கைவீசியே திரும்பிடும் காட்சிதனைப்பார்
ஆஹா ஹா ஹா வாழ்விலே ஓர் ஆனந்தம்
இனி—பெறுவோம் நாமே நாளுமே ஓ மாரனே!
யாழோடிசை போல் கூடியே (வாழ்)
மா நதி மீதிலே தோணியுலாவியே
காதலிசை பாடிடவே ஆசை அதிகமாகுதே!
மா வீரனே வாராயே ஏகுவோம்!
மாமோகனா யாரேனுமே காணாதுமே பூங்காவிலே
மலைமேலே தாவும் முகில் போலவே
ஓடியே நாம் ஆடியே (வாழ்)
வானகமேவியே மாமதி மீதிலே
நாமாடலாம் வாராயே நீயுமே
வானோரிலும் மேலான உன் மீதிலேதான் மாலாகியே
முகில் காண ஆடும் மயில் போலவே
பாரீரிதோ நானாடுறேன் (வாழ்)
இசைக்கலையே இனிதாமே மேலான
