மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 31 · 31 / 57
[பத்மாவதி அறை]
மனோகரன் : அம்மா... அம்மா... அம்மா... துள்ளிவரும் வேல் ஆவேசத்தை அள்ளிவரும் வாள் அவைகளை எல்லாம் தடுத்திருக்கிறேன். அவைகளைவிடப் பெரியவளா என்னை நகையாடிய இந்த கள்ளி? ஆனால் அவளைத்தான் எதிர்க்க முடியாமல் ஓடி வந்திருக்கிறேன். யாராலம்மா? தங்களால் — தங்கள் கட்டளையால் — சத்தியத்தால்!
பத்மாவதி : மனோகரா! விஷயத்தைச் சொல்! என்ன நடந்தது?
மனோ : தன்மானம் தரைமட்டமானது, வீரம் விலை கூறப்பட்டது. அவமானச் சின்னம் ஆணவத்தால் ஆடியது! அம்மா! தங்கள் கட்டளையை உடனே மாற்றிக் கொள்ளவேண்டும்.
பத் : சத்தியம் செய்திருக்கிறாய் செல்வா!
மனோ : வீரன் கோழையாவதா? துடிக்கும் தோள்கள் துவண்டுபோவதா? வேண்டாம்... அந்த விபரீத சத்தியத்தை நான் காப்பாற்றவேண்டாம்......
[மனோகரன் போய்விடுகிறான்]
விஜயா நுழைகிறாள்...
பத் : என்ன நடந்தது விஜயா...
விஜ : அந்தப் பாதகி வசந்தசேனை (விம்மி அழுகிறாள்)
